பாக்யராஜ் நடித்த பவுனு பவுனு தான் படத்தின் மூலம், அறிமுகமானவர் போண்டா மணி. இந்த படத்திற்கு பிறகு, வடிவேலு, விவேக் ஆகியோர் உடன் இணைந்து, 270-க்கும் மேற்பட்ட படங்களில், நடித்துள்ளார்.
சமீபத்தில் சிறுநீரகம் செயலிழந்த நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், இன்று தனது வீட்டில் மயக்கம் அடைந்த அவரை, உறவினர்கள், மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த தகவலை அறிந்த சினிமா உலகினர், அவருக்கு இரங்கல் கூறி வருகின்றனர்.