மெட்டி ஒலி சீரியலில் போஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் போஸ் வெங்கட். இவர் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் போஸ் வெங்கட்டின் சகோதரி வளர்மதி நேற்று உயிரிழந்துள்ளார், அவர் இறந்த சில மணி நேரத்திலேயே அவரின் சகோதரர் ரங்க நாதனும் இறந்துள்ளார்.

தற்போது போஸ் வெங்கட் குடும்பத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு உயிரிழப்புகள் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.