கோவை மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில், கலந்துக் கொண்ட காமெடி நடிகர் போஸ்கி, பிராமணர்கள் தான் உயர்ந்த சாதி என்றும், ஐயர், ஐயங்கார் என்று நாம் பிரிந்திருக்கக் கூடாது.. நமக்குள் ஒற்றுமை வேண்டும் என்றும் பேசியிருந்தார்.
இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குநர் பிரவீன், அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார். “ஆங்கிலம் பேசுவதாலேயே ஒருவன் அறிவாளி கிடையாது என்றும், மாடர்ன் உடை அணிவதாலேயே ஒருவன் நாகரீக மனிதன் கிடையாது என்றும்” தெரிவித்துள்ளார். மேலும், இவர் பேசுவது காமெடி கிடையாது.. இவர் தான் காமெடி என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.