ராயன் படத்தில் ரஜினிகாந்த்? மேடையில் தெறிக்கவிட்ட தனுஷ்!

நடிகர் தனுஷ் தற்போது இயக்கி நடித்துள்ள 2-வது திரைப்படம் ராயன். இவரது 50-வது படமான இது, வரும் 26-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. ரிலீஸ்-க்கு இன்னும் சில நாட்களே இருப்பதால், படத்தின் புரமோஷன் பணிகள், மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

குறிப்பாக, தனுஷ்-க்கு தெலுங்கு மொழியிலும் ரசிகர்கள் இருப்பதால், அப்பகுதிகளிலும், அதிகப்படியான புரமோஷன் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு நடத்தப்பட்ட புரமோஷன் நிகழ்ச்சியில், நடிகர் தனுஷிடம் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது

அதற்கு அவர் அளித்த பதில் தான் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதாவது, “ராயன் படத்தில், நீங்கள் நடித்து இயக்கியிருக்கிறீர்கள். ஆனால், நீங்கள் இந்த படத்தை இயக்க மட்டுமே செய்திருந்தால், இதில் ராயனாக யார் நடித்திருப்பார்கள்” என்று கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த அவர், “நிச்சயமாக ரஜினிகாந்த் சார் தான்“ என்று கூறினார். இவர் சொன்னது போல், ரஜினிகாந்த் இப்படத்தில் நடித்திருந்தார், படத்தின் மீதான எதிர்பார்ப்பு 100 மடங்கு அதிகரித்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News