லியோ படம் தொடங்கப்பட்டதில் இருந்தே, ரசிகர்கள் மத்தியில் ஒரு கேள்வி இருந்துக் கொண்டே இருந்தது. லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸில் தான் லியோ படம் உருவாகிறதா? இல்லையா? என்பது தான் அந்த கேள்வியாக இருந்தது. இந்த கேள்விக்கான பதில், இதுவரை படக்குழு தரப்பில் வழங்கப்படவில்லை.
ஆனால், லியோ பட பூஜையில், கைதி படத்தில் நெப்போலியன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜார்ஜ் மரியம் இடம்பெற்றிருந்தார். இதேபோல், விக்ரம் படத்தில் டீனா என்ற ஏஜெண்ட் கதாபாத்திரத்தில் நடித்திருந்த வசந்தியும், லியோ படப்பிடிப்பில் கலந்துக் கொண்டுள்ளார்.
இதன்மூலம், இது LCU பாணியிலான கதைக்களம் என்று ரசிகர்கள் ஊகித்திருந்தனர். இந்நிலையில், விக்ரம் படத்தில் அமர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த பகத் பாசில், லியோ படத்திலும் நடிக்க இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை, படக்குழு விரைவில் அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.