மீண்டும் ஹீரோவாக வரும் கவுண்டமணி! இவர்தான் இயக்குநர்!

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவர் கவுண்டமணி. 80, மற்றும் 90-களின் காலக்கட்டத்தில், கொடி கட்டி பறந்த இவர், தற்போது, சினிமாவில் நடிக்காமல் இருந்து வருகிறார்.

இவரை சினிமாவில் நடிக்க வைப்பதற்கு, நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் முயற்சி செய்ததாகவும், ஆனால், கவுண்டமணி அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், புதிய படம் ஒன்றில், கவுண்டமணி ஹீரோவாக நடிக்க உள்ளார். பேயை காணோம் என்ற படத்தை இயக்கிய அன்பரசன் தான், இந்த படத்தை இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.