கவுண்டமணி, யோகிபாபு ஆகியோர் நடிப்பில், சாய் ராஜகோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஒத்த ஓட்டு முத்தையா.
அரசியல் நையாண்டி பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் ஷூட்டிங், சமீபத்தில் முடிவடைந்தது. இதையடுத்து, படக்குழுவினர் டப்பிங் பணிகளை தொடங்கினர்.
முதலில் டப்பிங்கை ஆரம்பித்த கவுண்டமணி, தொடர்ச்சியாக 8 மணி நேரங்கள் டப்பிங் பேசியுள்ளார். இதுதொடர்பான தகவல், சினிமா வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.