Connect with us

Raj News Tamil

சர்வர் சுந்தரம் படத்தில் நடித்துள்ள கவுண்டமணி! வைரலாகும் பழைய புகைப்படம்!

சினிமா

சர்வர் சுந்தரம் படத்தில் நடித்துள்ள கவுண்டமணி! வைரலாகும் பழைய புகைப்படம்!

பாரதிராஜா இயக்கத்தில், கமல், ரஜினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் 16 வயதினிலே.

இந்த திரைப்படத்தின் மூலம், தன்னுடைய சிறப்பான சினிமா பயணத்தை, நடிகர் கவுண்டமணி தொடங்கியிருந்தார். மேலும், இந்த திரைப்படம் தான், அவரது முதல் திரைப்படம் என்றும் ஒருசிலர் கூறி வந்தனர்.

ஆனால், தற்போது யாரும் பார்க்காத பழைய புகைப்படம் ஒன்றும் வெளியாகி, பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

அதாவது, நடிகர் கவுண்டமணி, சர்வர் சுந்தரம் என்ற திரைப்படத்தில், நடிகர் நாகேஷ் உடன் இணைந்து, சிறிய காட்சி ஒன்றில் நடித்துள்ளார். இதுதொடர்பான புகைப்படம், இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

More in சினிமா

To Top