நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், 293 இடங்களை கைப்பற்றிய தேசிய ஜனநாயக கூட்டணி, வெற்றி பெற்றது. இதையடுத்து, ஆட்சியமைக்க குடியரசுத் தலைவரிடம், உரிமை கோரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி உள்ளிட்ட மற்ற கட்சி தலைவர்களும், கூட்டணி கட்சியினரும், இன்று பதவியேற்க உள்ளனர்.
இந்நிலையில், நடிகர் கவுண்டமணி நடித்துள்ள ஒத்த ஓட்டு முத்தையா படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த போஸ்டரில், பதவி ஏற்பு விழா என்றும், மிக விரைவில் பொதுமக்களை சந்திக்க உள்ளார் என்றும், குறிப்பிட்டுள்ளது. பிரதமர் மோடி பதவியேற்க உள்ள நிலையில், கவுண்டமணி நடித்துள்ள படத்தின் இந்த போஸ்டர், வைரலாகி வருகிறது.
