நடிகர் ஹுசைனி காலமானார்!

புன்னகை மண்ணன் படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஹுசைனி. இந்த படத்திற்கு பிறகு, வேடன், பத்ரி, காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களில், சிறிய வேடங்களில் அவர் நடித்திருந்தார்.

அடிப்படையில் கராத்தே பயிற்சியாளரான இவர், கடந்த சில நாட்களாக, உடல் நலக்குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவரது மருத்துவ செலவுக்கு, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், நிதியுதவி வழங்கியிருந்தார்.

இவ்வாறு இருக்க, இன்று நள்ளிரவு 1.45 மணிக்கு, ஹுசைனி சிகிச்சை பலன் இன்றி, காலமானார். இவரது உடல், பொதுமக்கள், திரைத்துறையினர் அஞ்சலிக்காக, சென்னை பெசன்ட் நகரில் வைக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News