இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ரஜினிகாந்தின் 70% காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன.

நடிகர் ரஜினிகாந்த் உடன் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஆகியோர் உடன் ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முதலில் இந்த கதாபாத்திரத்திற்கு அமிதாப்பச்சனை நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அவருக்கு பதிலாக ஜாக்கி ஷெராப் நடிக்க உள்ளார்.