பொன்னியின் செல்வன் நடிகரை தாக்கிய கொரோனா!

சீனாவின் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுக்க பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதன்காரணமாக, உலகத்தின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சாதாரண மக்கள் முதல் திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் வரை பல்வேறு தரப்பினர், இந்த கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தற்போது, இதன் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ராஜராஜசோழன் கதாபாத்திரத்தில் நடித்த ஜெயம் ரவிக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள அவர், “எனக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக் கவசம் அணிந்து பாதுகாப்பாக இருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.