Connect with us

Raj News Tamil

பிரபல நடிகர் ஜூனியர் பாலய்யா காலமானார்!

சினிமா

பிரபல நடிகர் ஜூனியர் பாலய்யா காலமானார்!

தில்லானா மோகனாம்பாள் படத்தில் நடித்து பிரபலம் அடைந்தவர் டி.எஸ்.பாலய்யா. வரலாற்று சிறப்புமிக்க நடிகரான இவருக்கு, ரகு பாலய்யா என்ற மகன் உள்ளார்.

ஜூனியர் பாலய்யா என்று அழைக்கப்படும் இவர், கோபுர வாசலிலே, சுந்தர காண்டம், வின்னர், கும்கி, சாட்டை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

70 வயதான இவர், வளசரவாக்கம் பகுதியில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், இன்று காலை மூச்சுத்திணறல் ஏற்பட்டு, இயற்கை எய்தினார்.

இவரது மறைவை அறிந்த திரையுலகினரும், சினிமா ரசிகர்களும், இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

More in சினிமா

To Top