விஜய் நடிப்பில் உருவான பிகில் திரைப்படத்தில், பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் இந்திரஜா.
காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகளான இவர், கார்த்திக் என்பவரை, கடந்த ஆண்டு திருமணம் செய்துக் கொண்டிருந்தார். சமீபத்தில், இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்திருந்தது.
இந்நிலையில், இந்த குழந்தைக்கு, நட்சத்திரன் என்று நடிகர் கமல் ஹாசன் பெயர் சூட்டியுள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தை, கார்த்திக் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.