Connect with us

Raj News Tamil

அஜித் பட இயக்குனருடன் இணையும் உலக நாயகன் கமல்..! ஷூட்டிங் எப்போ??

சினிமா

அஜித் பட இயக்குனருடன் இணையும் உலக நாயகன் கமல்..! ஷூட்டிங் எப்போ??

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதையடுத்து கமல் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் எச் வினோத் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் கமல் நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. இதன் படப்பிடிப்பு நவம்பரில் துவங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை எச் வினோத் இயக்கியுள்ளார். இதில் வலிமை படத்தை தவிர மற்ற படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் எச் வினோத் இயக்கத்தில் கமல் நடிக்க உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top