வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் கார்த்தி. இவரது ஒவ்வொரு திரைப்படங்களும், தனித்துவமாகவும், ரசிகர்களை கவரும் வகையிலும் இருந்து வருகிறது.
பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன், கைதி, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்கள், இன்றளவும் ரசிகர்களை கவரக் கூடிய ஒன்றாக உள்ளது.
இந்நிலையில், நடிகர் கார்த்தி தனது மார்கெட்டை உயர்த்தும் வகையில், பல்வேறு இளம் இயக்குநர்கள் உடன், கூட்டணி வைக்க உள்ளார்.
அதன்படி, ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் என்ற படத்திலும், நலன் குமாரசாமி இயக்கத்தில் 26-வது படத்திலும், 96 பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் 27-வது படத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 படத்திலும் நடிக்க உள்ளார்.
இதுமட்டுமின்றி, கைதி 2, பேச்சுலர் பட இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில், அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் என்று வரிசையாக ஹிட் இயக்குநர்களுடன் கூட்டணி வைக்க உள்ளார்.
இந்த படங்கள் அனைத்தும், எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் பெரிய வெற்றியை பதிவு செய்தால், தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக கார்த்தி மாறுவார் என்பதில், எந்த ஐயமும் இல்லை என்றே சொல்லலாம்…,