பசும்பொன்னில் சாகும் வரை உண்ணாவிரதம் நடிகர் கருணாஸ் அதிரடி அறிவிப்பு..!

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 115-வது ஜெயந்தி தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் அவர் பிறந்த இடமான பசும்பொன்னில் பொதுமக்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் பங்கேற்று வருகின்றனர்.

இந்த நிலையில் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் நீண்ட நாள் கோரிக்கையான, மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் பெயரை சூட்டவேண்டும் என்பதை வலியுறுத்தி, பசும்பொன்னில், தேவர் பெயரில் மதுரை ஏர்போர்ட் மாதிரி விழா மேடை வைக்கப்பட்டது.

இந்த மேடையை கமுதி டிஎஸ்பி மணிகண்டன் எந்தவொரு அறிவிப்பும் இன்றி அராஜாக முறையில் அப்புறப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆகவே இதனை கண்டித்து பசும்பொன்னில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அக்கட்சின் தலைவர் கருணாஸ் கூறியுள்ளார்.