வெண்ணிலா கபடிக்குழு பட நடிகர் மாயி சுந்தர் காலமானார்

வெண்ணிலா கபடிக்குழு படம் மூலம் பிரபலமான நடிகர் மாயி சுந்தர் இன்று அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 50.

மாயி, துள்ளாத மனமும் துள்ளும், வெண்ணிலா கபடி குழு, குள்ள நரி கூட்டம், சிலுக்குவார் பட்டி சிங்கம், கட்டா குஸ்தி என 50 க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு வந்த இவர் அவருடைய சொந்த ஊரான மன்னார்குடியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.