நடிகர், டப்பிங் கலைஞர், துணை இயக்குநர், மிமிக்ரி கலைஞர், வசனகர்த்தா என்று பல்வேறு பரிமானங்களை கொண்டவர் மணிகண்டன்.
சமீப காலங்களாக ஹீரோவாக களமிறங்கியுள்ள இவர், ஜெய் பீம், குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன் என்று தொடர் வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில், இவரது அடுத்த படம் குறித்து புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது.
அதாவது, நடிகர் மணிகண்டன் புதிய ஸ்கிரிப்ட் ஒன்றை எழுதி முடித்துள்ளாராம். இந்த கதையை தானே இயக்கி, நடிப்பதற்கு, அவர் முடிவு செய்துள்ளாராம். இதுதொடர்பான தகவல் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.