Connect with us

Raj News Tamil

சிறுவயது முதல் சினிமா மீது அதிக ஆர்வம் கொண்ட மனோபாலா..!

சினிமா

சிறுவயது முதல் சினிமா மீது அதிக ஆர்வம் கொண்ட மனோபாலா..!

சென்னை சாலிகிராமத்தில் வாழ்ந்து வந்த மனோபாலாவுக்கு உஷா என்ற மனைவியும், ஹரிஷ் என்ற மகனும் உள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறைச் சேர்ந்தவர் மனோபாலா(69). இவர் சிறுவயது முதல் சினிமா மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருந்து வந்துள்ளார். நடிகர் கமல் உதவியுடன் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக சேரும் வாய்ப்பு மனோபாலாவுக்கு கிடைத்தது.

கார்த்திக், சுஹாசினி நடித்த ‘ஆகாய கங்கை’ என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். ஆரம்ப காலங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த மனோபாலா நட்புக்காக படத்தின் மூலம் முழுநேர நடிகராக மாறினார். எச் வினோத் இயக்கத்தில் வெளியான ‘சதுரங்க வேட்டை’ படத்தை தயாரித்தார்.

ஓவியர், திரைப்பட இயக்குநர், கதாசிரியர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட மனோபாலா 200க்கும் அதிகமான படங்களில் நடித்தும் உள்ளார்.

சமீபத்தில் அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டதால் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது.சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் இன்று அவர் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top