Connect with us

Raj News Tamil

நடிகர் மனோபாலா காலமானார்!

சினிமா

நடிகர் மனோபாலா காலமானார்!

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மனோபாலா. பின்னர், காமெடி நடிகராக வலம் வந்த இவர், முன்னணி நடிகர்கள் அனைவருன் உடனும் நடித்துள்ளார்.

இதையடுத்து, சினிமா தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கிய மனோ பாலா, சதுரங்க வேட்டை உள்ளிட்ட திரைப்படங்களையும் தயாரித்துள்ளார்.

69 வயதாகும் இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு, கல்லீரல் பிரச்சனை தொடர்பாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், இன்று சிகிச்சை பலன் இன்றி, அவர் காலமானார். இதனை அறிந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும், இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top