தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் இயக்குனருமான மனோபாலா நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். அவர் இறந்த தகவல் அறிந்ததும் திரையுலகினரும், அவரது ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அவருடைய மறைவுக்கு திரையுலகினர்களும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.
மனோபாலாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை சாலிகிராமம் எல்.வி.சாலையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டது.

இந்நிலையில் நடிகர் மனோபாலாவின் உடல் வளசரவாக்கம் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அங்குள்ள மின் மயானத்தில் மனோபாலாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.