சூது கவ்வும் 2-ஆம் பாகத்தில் இவர் ஹீரோவா? அப்ப சிரிப்புக்கு கேரன்டி இருக்கு?

நலன் குமாரசாமி இயக்கத்தில், விஜய்சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், ரமேஷ் திலக், பாபி சிம்ஹா என்று பலர் நடித்திருந்த திரைப்படம் சூது கவ்வும்.

கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த தகவலின்படி, இந்த பாகத்தில் நடிகர் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடிக்க உள்ளாராம். இவர் மட்டுமின்றி, சத்யராஜ், கருணாகரன் உட்பட மற்ற நடிகர்களும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

RELATED ARTICLES

Recent News