விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பை தவற விட்ட நடிகர் மோகன்…எந்த படத்தில் தெரியுமா?

90s காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களுக்கு போட்டியாக திரைத்துறையில் வெற்றி கண்டவர் நடிகர் மோகன். மோகன் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. அவர் நடித்து வந்த படங்களுக்கு அவருடைய நண்பர் சுரேந்தர் டப்பிங் கொடுத்து வந்தார்.

சுரேந்தருக்கும் மோகனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மோகன் படங்களுக்கு டப்பிங் கொடுப்பதை சுரேந்தர் நிறுத்தி விட்டார். அதன் பிறகு வெளியான மோகன் படங்கள் தோல்வியை சந்தித்தது.

மோகனுக்கு விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் விஜய்க்கு வில்லனாக மகேந்திரன் நடித்து அசத்தியிருப்பார். மகேந்திரன் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நடிகர் மோகனிடம் அட்லீ பேசினார். ஆனால் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என மோகன் கூறியதால் அந்த கதாபாத்திரத்தில் மகேந்திரன் நடித்தார்.

விஜய்யுடன் இணைந்து நடிக்க பல முன்னணி நடிகர்களே ரெடியாக இருக்கும் போது தேடி வந்த நல்ல வாய்ப்பை மோகன் மிஸ் செய்துவிட்டாரே என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

தற்போது மோகன் ‘ஹரா’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தில் குஷ்பூ, யோகி பாபு நடித்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News