சமந்தாவை சந்திக்கும் நாகர்ஜுனா, நாக சைத்தன்யா? காரணம் இதுதான்!

நடிகை சமந்தாவிற்கும், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா மகன் நாக சைத்தன்யாவிற்கும், திருமணம் நடந்தது. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2021-ஆம் ஆண்டு அன்று, இருவருக்கும் விவாகரத்தானது.

இந்நிலையில், நடிகர் நாகர்ஜுனாவும், நாக சைத்தன்யாவும், சமந்தாவை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நடிகை சமந்தாவிற்கு அரியதொரு தசை பிடிப்பு நோய் ஏற்பட்டுள்ளது.

எனவே, அவரது உடல் நலனை விசாரிப்பதற்காக, இருவரும் செல்ல உள்ளார்களாம். ஆனால், அது சக நடிகை என்று முறையில் மட்டுமே என்றும் தகவல் கசிந்துள்ளது.