ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த போது வெளிநாட்டு நிறுவனத்துடன் இணைந்து ஊழல் செய்ததாக நேற்று கைது செய்யப்பட்டார். இதையடுத்து, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பேருந்துகள் நிறுத்தப்பட்டதோடு கடைகள், வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டன.
சந்திரபாபு கைது செய்யப்பட்டதற்கு ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து சந்திரபாபு நாயுடுவை சந்திக்கச் சென்ற ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாணுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில், ஆந்திர காவல்துறை நடவடிக்கையால் ஆவேசம் அடைந்த பவன் கல்யாண் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சாலையில் அமர்ந்தும், படுத்தும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது பவன் கல்யாணை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியது.