சொத்தை அடமானம் வைத்து கடன் வாங்கிய பிரபாஸ் : திரையுலகில் சலசலப்பு

தெலுங்கு நடிகர் பிரபாஸ் ‘பாகுபலி’ படத்தின் மூலம் தெலுங்கு திரையுலக ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் வெகுவாக கவர்ந்தார். இதனையடுத்து அவருக்கு பல பட வாய்ப்புகள் அடுக்கடுக்காக குவிந்தது.

இவர் ஒரு படத்திற்கே சுமார் ரூ.150 கோடிக்கும் மேலாக சம்பளம் வாங்கி வருகிறார். மேலும் இவருடைய நிகர சொத்து மதிப்பு சுமார் $27 மில்லியன் ஆகும்.

இந்நிலையில் நடிகர் பிரபாஸ் தனது சொத்தை பிணையமாக வைத்து வங்கியிலிருந்து சுமார் ரூ.21 கோடி கடன் தொகையை பெற்றிருப்பது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ராதே ஷ்யாம் மற்றும் சாஹோ படமும் பெரும் தோல்வியினை தழுவியது. இதனால் நடிகர் பிரபாஸ் தனது சம்பளத்தின் பெரும்பகுதியை திருப்பி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த வாரம் புதன்கிழமையன்று பிராபாஸ் ரூ.21 கோடி கடனுக்கான காசோலையை வங்கியிலிருந்து பெற்றிருக்கிறார், இந்த செய்தி தான் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. பிரபாஸ் புதிய தொழிலில் முதலீடு செய்வதற்காக தான் வங்கியிலிருந்து கடன் தொகையை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.