Connect with us

Raj News Tamil

நடிகர் பிரசாந்துக்கு 2-வது திருமணமா? வைரல் தகவல்!

சினிமா

நடிகர் பிரசாந்துக்கு 2-வது திருமணமா? வைரல் தகவல்!

பாலு மகேந்திரா, மணிரத்னம், ஷங்கர் என்று பல்வேறு முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து, பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்தவர் நடிகர் பிரசாந்த். ஆனால், காலம் செய்த கோலம் காரணமாக, பல வருடங்களாக சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

இந்நிலையில், தற்போது அந்தகன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ள பிரசாந்த், தளபதி விஜயின் தி கோட் படத்திலும், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த இரண்டு படங்களும் வெளியான பிறகு, நடிகர் பிரசாந்த், இரண்டாவது திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாக, இணையத்தில் தகவல் பரவி வருகிறது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள், அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

ஆனால், இதுவரை, இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. நடிகர் பிரசாந்த், 2005-ஆம் ஆண்டு கிரகலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் விவாகரத்து பெற்று, பிரிந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top