இரண்டாவது திருமணம் நடந்தது உண்மையா? – நடிகர் பப்லு விளக்கம்!

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகர் பிரித்விராஜ். இவருக்கு, இரண்டாவது திருமணம் நடைபெற்றதாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு, தகவல் பரவி வந்தது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அவர், அந்த தகவல் அனைத்தும் வதந்தி என்று தெரிவித்துள்ளார்.

பலரும் என்னிடம் இதுகுறித்து கேட்டனர். நான் முதலில் விளையாட்டாக கேட்கிறார்கள் என்று நினைத்தேன். அதன்பிறகு, இவ்வாறு செய்தி பரவி வருவது தெரியவந்தது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், எனக்கு இரண்டாம் திருமணம் செய்துக் கொள்ளும் எண்ணம் உள்ளது. ஆனால், அதனை திருட்டுத்தனமாக செய்துக் கொள்ள மாட்டேன். எல்லோருக்கும் தெரியும் வகையில் தான் செய்வேன் என்றும் அவர் கூறியுள்ளார்.