இரண்டாம் திருமணம் செய்த பிரபல நடிகர்!

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வந்தவர் நடிகர் பிரித்விராஜ். 56 வயதாகும் இவருக்கு, ஆட்டிசம் குறைபாடு உள்ள 25 வயது மகன் உள்ளார். மகனுக்கு இந்த பிரச்சனை இருப்பதால், நடிப்பதில் இருந்தே விலகி இருந்த இவர், மகனை கண்ணும் கருத்துமாக பார்த்து வந்துள்ளார்.

இதற்கிடையே, இவருக்கும், இவரது மனைவி பீனா என்பவருக்கும் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை விவாகரத்து செய்துள்ள இவர், 23 வயதுடைய மலேசியாவை சேர்ந்த பெண் ஒருவரை மறுமணம் செய்துக் கொண்டுள்ளார். மலேசியாவில் இவர் தொழில் தொடங்க முயற்சித்தபோது, இந்த பெண் தான் உதவி செய்துள்ளாராம்.

அப்போதில் இருந்து, இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளதாம். நடிகர் பிரித்விராஜ் மறுமணம் செய்துக் கொண்டுள்ள செய்தி, சின்னத்திரை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.