தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக தனது பயணத்தை தொடங்கிய ராகவா லாரன்ஸ், தற்போது, இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என்று பல்வேறு பரிமானங்களில் ஜொலித்து வருகிறார்.
நடிப்பது மட்டுமின்றி, அறக்கட்டளைகள் மூலம், பல்வேறு உதவிகளையும், செய்து வருகிறார். இவ்வாறு இவரது சமூக, சினிமா வரலாறு மட்டும் அறிந்த ரசிகர்களுக்கு, இவரது குடும்ப வாழ்க்கை பற்றி தெரிந்தது குறைவு தான்.
இந்நிலையில், இவரது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் ஒன்று, இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.
