வேட்டையன் இசை வெளியீட்டு விழா – ரஜினிகாந்த் சொன்ன குட்டி கதை என்ன?

ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட சூப்பர் ஸ்டார், ரசிகர்களிடம் உரையாற்றினார்.

அப்போது, தனது ஸ்டைலில் ஒரு குட்டி கதையை அவர் கூறியிருந்தார். அதாவது, “ஆறில் இருந்து அறுபது வரை படத்தில், இருந்த ஒரு நடிகர் ரஜினியை இந்த படத்தில் நான் பார்க்க வேண்டும் என்று ஞானவேல் ராஜா என்னிடம் கூறினார்.

அதற்கு, இமாச்சல பிரதேசத்தில் நடந்த ஒரு உண்மை கதையை நான் அவரிடம் கூறினேன். அந்த மாநிலத்தில் இருக்குற ஒரு சின்ன ஊர்ல, ஒரு டோபி இருந்தார். அந்த ஊர்ல இருக்கிற ஒரு குளத்தைக் கடக்க ஒரு கழுதையைத்தான் பயன்படுத்துவாங்க.

ஒரு நாள் அந்தக் கழுதை காணாமல் போக அந்த அதிர்ச்சியில் டோபி எல்லாத்தையும் மறந்துவிடுகிறார். அப்ப எல்லாரும் சேர்ந்து அவருக்குக் காவி உடை உடுத்தி அவரை சாமியாரா ஆக்கிடறாங்க.

இப்போ ஒரு நாள் கழுதை திரும்ப வந்துடுது. மறுபடியும் டோபிக்கு பழசெல்லாம் ஞாபகம் வந்திருச்சு. அப்போ எல்லாரும் அந்த டோபி கிட்ட இதையே நம்ம பாத்துக்கலாம்… இந்த வாழ்க்கை நல்லா இருக்குனு சொல்றாங்க. அந்த மாதிரிதான் அந்தப் படங்களோட ஓகே இல்லாத ஃபுட்டேஜஸை நீங்க பார்க்கல என்றேன்” என்று கூறினார்.

RELATED ARTICLES

Recent News