Connect with us

Raj News Tamil

அடேங்கப்பா…தலைசுற்ற வைக்கும் ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு…

சினிமா

அடேங்கப்பா…தலைசுற்ற வைக்கும் ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு…

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார்.

பாலச்சந்தர் இயக்கத்தில் 1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். தற்போது 72 வயதான நடிகர் ரஜினிகாந்த் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் ரஜினிகாந்தின் அசையா சொத்துக்கள் மட்டுமே 400 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

ரஜினிகாந்திடம் சொந்தமாக 4 வெளி நாட்டு கார்கள் உள்ளன என்றும், இவற்றின் மதிப்பு மட்டுமே 47 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது. மேலும் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டின் மதிப்பு மட்டுமே 35 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top