நாங்குநேரி சம்பவம் – கோபத்தை வெளிப்படுத்திய பிரபல தமிழ் நடிகர்!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில், 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை, சக மாணவர்கள் கொடூரமாக தாக்கினர்.

சாதிய ரீதியாக நடந்த இந்த தாக்குதலில், அந்த மாணவனும், அவரது தங்கையும், படுகாயம் அடைந்தனர். தமிழகம் முழுவதும், இந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு, சினிமா மற்றும் திரை பிரபலங்கள் பலரும், கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து, நடிகர் ராஜ்கிரன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், நான் பள்ளியில் படித்த காலங்களில், இந்து, இஸ்லாம், கிருஸ்துவம், போன்று எல்லா மதங்களை சார்ந்த மாணவர்களும்,பள்ளர், பறையர், தேவர், அருந்ததியர்,
நாடார், செட்டியார், பிள்ளைமார் போன்று எல்லா சாதிகளைச் சார்ந்த மாணவர்களும்
ஒன்றாகத்தான் படித்தோம்.

யாரும் எவ்வித பேதமும் பார்த்ததில்லை. ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக, ஒரே தாய் பிள்ளைகள் போல் படித்தோம். எங்களுக்கு கற்றுத் தந்த ஆசிரியர்களும் எல்லா சாதி மதமும் கலந்து தான் இருந்தார்கள்.

அவர்கள் அனைவரும் எவ்வித பேதமும் பார்க்காமல், எல்லா மாணவர்களையும் தங்களின் சொந்தப் பிள்ளைகள் போல், அன்புடனும் அக்கறையுடனும் பயிற்றுவித்தார்கள்.

இன்று, மாணவர்கள் மற்றும் சமூக சூழலை நினைத்து மனம் பதறுகிறது. இப்படியான சூழல் எப்படி உருவானது? அந்தக்காலம் போல் இந்தக்காலமும் மாறி விடாதா இறைவா என்று, ஆதங்கப்பட மட்டுமே முடிகிறது… என்று கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News