ரஜினி, அஜித், விஜய் என்று பல்வேறு முன்னணி நடிகர்களுடன், இணைந்து நடித்தவர் நடிகை ரோஜா. இயக்குநர் செல்வமணியை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட இவர், தற்போது ஆந்திர அரசியலில், முக்கிய புள்ளியாக இருந்து வருகிறார்.
மேலும், சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் பெங்களுார் பகுதிக்கு சென்ற அவர், அங்குள்ள Pub ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு ஒலிக்கப்பட்ட பாடலுக்கு, நடனம் ஆடியுள்ளார்.
இதுதொடர்பான வீடியோ, இணையத்தில் வெளியாகி, பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.