Connect with us

Raj News Tamil

அதிரடியான கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ்..!!!

சினிமா

அதிரடியான கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ்..!!!

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் நடிகர் சத்யராஜ். தற்போது இவர் நடித்திருக்கும் புதிய படம் வெப்பன் . அதிரடியான கதையம்சம் கொண்ட இப்படத்தை வெள்ளைரோஜா என்ற வெப் தொடரை இயக்கி பிரபலமான குகன் சென்னியப்பன் இயக்கியுள்ளார்.

படத்தில் ராஜிவ் பிள்ளை, ராஜிவ் மேனன், வசந்த் ரவி, கனிகா போன்ற பலர் நடித்திருக்கின்றனர். இப்படத்தில் சத்யராஜ் யானையுடன் ஒரு காட்சியில் நடித்துள்ளார்.இதற்காக அவர் யானைகளுடன் சில நாட்கள் பழகி பயிற்சி எடுத்துக்கொண்டார் என தகவல் வெளியாகியுள்ளது .

திரைப்படத்திற்கு ஏற்றவாறு பல்வேறு கோணங்களில் வித்தியாசம் காட்டும் சத்யராஜ் இப்படத்திலும் ஒரு மாறுபட்ட வேடத்தில் நடித்திருக்கிறார் என வெப்பன் படக்குழு தெரிவிக்கின்றனர். நடிகை கனிகா முதன்முதலாக இப்படத்தில் கேங்ஸ்டராக நடித்துள்ளார் . அவரது நடிப்பு பேசப்படும் என கூறப்படுகிறது. இப்படப்பிடிப்பானது கேரளாவில் வயநாடு காட்டுப்பகுதியில் நடந்துள்ளதாக தெரிகிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top