Connect with us

Raj News Tamil

கார்த்தி படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல ஹீரோ!

சினிமா

கார்த்தி படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல ஹீரோ!

கார்த்தி நடிப்பில், ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஜப்பான். இந்த திரைப்படம், வரும் தீபாவளி பண்டிகை அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்திற்கு பிறகு, இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கும் புதிய படத்தில், கார்த்தி நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படம் தொடர்பான புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தில் கார்த்திக்கு வில்லனாக நடிகர் சத்யராஜ் தான் நடிக்க உள்ளாராம்.

தம்பி, கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்களுக்கு பிறகு, கார்த்தியும், சத்யராஜும் இணைந்து நடிக்கும் திரைப்படம், இது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top