நடிகர் சத்தியராஜ் மகள் வீடியோ பதிவிட்டு வேதனை..!

தமிழில் முன்னணி ஹீரோவாக விளங்கியவர் நடிகர் சத்தியராஜ். வயது முதிர்வு காரணத்தால் முதன்மை கதாபாத்திரத்தில் மட்டும் நடிக்கும் இவர், தற்போது நயன்தாராவின் கனெக்ட் படத்தில் அவருக்கு தந்தையாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவரது மகள் டாக்டர் திவ்யா சத்தியராஜ் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த ஒருவரின் மாத்திரையை வாங்கி பார்த்தேன், ஆனால் அது காலாவதியாகிவிட்டது.

இது தெரியாமல் அவர் பயன்படுத்தி வந்துள்ளார். மேலும் இதுபோன்ற மருந்துகளை கடைக்காரர்கள் விற்காதீர்கள், இதனால் உடலுக்கு பலவித தீங்குகள் ஏற்படும் என்று வேதனையோடு தெரிவித்தார்.