Connect with us

Raj News Tamil

24 வருடங்களுக்கு பிறகு ரஜினி படத்தில் நடிக்கும் பிரபல காமெடி நடிகர்?

சினிமா

24 வருடங்களுக்கு பிறகு ரஜினி படத்தில் நடிக்கும் பிரபல காமெடி நடிகர்?

3, வை ராஜா வை ஆகிய படங்களுக்கு பிறகு, லால் சலாம் என்ற படத்தை, ஐஸ்வர்யா ராஜேஷ் இயக்கி வருகிறார். இந்த படத்தில், விஷ்னு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தில், நடிகர் ரஜினிகாந்துடன் பிரபல காமெடி நடிகர் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, எஜமான், அருணாச்சலம், முத்து, வீரா, படையப்பா ஆகிய படங்களில், ரஜினியுடன் செந்தில் நடித்திருப்பார். இந்த படங்களுக்கு பிறகு, சுமார் 24 வருடங்களுக்கு பிறகு, ரஜினி படத்தில் செந்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top