தமிழில் வெளியான எங்கேயும் எப்போதும், காதல்னா சும்மா இல்ல, கணம் போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் நடிகர் சர்வானந்த்.
நடிகர் சர்வானந்த் நேற்றிரவு ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் ரேஞ்ச் ரோவர் காரில் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சர்வானந்திற்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

சர்வானந்த் காரை ஓட்டிக்கொண்டிருந்த போது எதிரே பைக் வந்ததால் காரை திருப்பிய போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கார் விபத்தில் சிக்கிய சர்வானந்தை அருகில் இருந்தவர்கள் உடனே மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக சர்வானந்திற்கு பெரிய அடி ஏதும் படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.