ஹீரோவாக வாய்ப்பு பெற்ற துணிவு, மாஸ்டர் பட நடிகர்!

மிஷ்கினின் பல்வேறு படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் பிரகாஷ் கிருஷ்ணன். இவர் தற்போது புதிதாக திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளார்.

இந்த திரைப்படத்தில், நடிகர் சிபி என்பவர் ஹீரோவாக நடிக்க உள்ளார். ஜீவி படத்திற்கு கதை எழுதிய பாபு தமிழ் என்பவர் தான், இந்த படத்திற்கு திரைக்கதை எழுத உள்ளார்.

இளைஞர்களின் மனநிறைவை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் சிபி, விஜயின் மாஸ்டர், அஜித்தின் துணிவு ஆகிய 2 படங்களில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News