அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின் உள்ளிட்டோர், முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் டிராகன்.
இந்த திரைப்படம், நாளை திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், இந்த படம் குறித்து, நடிகர் சிம்பு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், டிராகன் திரைப்படம் ப்ளாக் பஸ்டர் வெற்றி பெறும் என்று கூறியுள்ளார். இவரது இந்த பதிவு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை, ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.