வாரிசில் படத்தில் இணையும் நடிகர் சிம்பு..!

வம்சி இயக்கத்தில், விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் வாரிசு. வருகின்ற பொங்கலுக்கு வெளியாகவுள்ள இப்படத்தின், முதல் பாடலான ரஞ்சிதமே ரஞ்சிதமே வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது. பின்னர் அடுத்த பாடல் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், டிசம்பர் 4-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில். வாரிசில் சிம்பு ஒரு பாடல் பாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கான பேச்சு வார்த்தைகள் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் மற்றும் சிம்பு ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.