நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2023-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் ஜெயிலர். இந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில், தற்போது அதன் 2-ஆம் பாகத்தை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜெயிலர் 2-ஆம் பாகத்தில் நடிப்பதை, பிரபல நடிகர் ஒருவர் உறுதி செய்துள்ளார். அதாவது, கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவராஜ்குமார், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டுள்ளார்.
அப்போது, ஜெயிலர் 2-ஆம் பாகத்தில் நடிப்பதை, அவர் உறுதி செய்துள்ளார். மேலும், தன்னுடைய காட்சிகள் தொடர்பான படப்பிடிப்பு, விரைவில் தொடங்க உள்ளது என்றும், சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்தாலும், அந்த படத்தின் ஒரு அங்கமாக இருப்பதற்கு விரும்புவதாகவும், அவர் கூறியுள்ளார்.