சிவராஜ்குமாருக்கு கேன்சர்.. இந்த நேரத்திலும் இயக்குநருக்கு உதவி..

ஈட்டி படத்தின் மூலம், இயக்குநராக அறிமுகமானவர் ரவி அரசு. இந்த படத்திற்கு பிறகு, ஜி.வி.பிரகாஷ்-ஐ வைத்து, ஐங்கரன் என்ற படத்தை இயக்கிய இவர், சிவராஜ்குமாரின் 130-வது படத்தை இயக்குவதற்கு, பல மாதங்களுக்கு முன்பு ஒப்பந்தம் ஆனார்.

ஆனால், சிவராஜ்குமார் தற்போது கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால், அவரால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை. இந்நிலையில், தனக்காக பல மாதங்கள் காத்திருந்த இயக்குநருக்கு, கேன்சர் சிகிச்சைக்கு மத்தியிலும் சிவராஜ்குமார் உதவி செய்ய முன்வந்துள்ளார்.

அதாவது, “தனுஷிடம் கதை சொல்வதற்கு ஏற்பாடு செய்கிறேன். உங்களுக்கு விருப்பம் இருந்தால், அவரிடம் கதை சொல்லுங்கள்” என்று கூறியுள்ளாராம். இந்த துயரமான நேரத்திலும், தன்னை நம்பியவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற சிவராஜ்குமாரின் எண்ணம், பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

RELATED ARTICLES

Recent News