ஜெயிலர் 2 படத்தில் இணைந்த பிரபல நடிகர்? உறுதியான சந்தேகம்!

ரஜினிகாந்த் – நெல்சன் கூட்டணியில் உருவான திரைப்படம் ஜெயிலர். இந்த திரைப்படத்தில், நடிகை ரம்யா கிருஷ்ணன், விநாயகன், வசந்த் ரவி, மோகன் லால், சிவராஜ் குமார் என்று பல்வேறு தரப்பினர் நடித்திருந்தனர்.

தற்போது, இந்த திரைப்படத்தின் 2-ஆம் பாகம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில், யார் வில்லனாக நடிக்கிறார்கள் என்ற கேள்வி, படம் ஆரம்பித்த சமயத்தில் இருந்து உள்ளது. இவ்வாறு இருக்க, இதற்கான பதில் தற்போது கிடைத்துள்ளது.

அதாவது, நடிகர் எஸ்.ஜே.சூர்யா, ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பில் தற்போது கலந்துக் கொண்டுள்ளாராம். மேலும், வில்லன் கதாபாத்திரத்தில் தான் அவர் நடித்து வருகிறாராம். இதன்மூலம், இந்த கேள்விக்கு, தகவலின் அடிப்படையில், தற்போது பதில் கிடைத்துள்ளது.

RELATED ARTICLES

Recent News