Connect with us

Raj News Tamil

மிரட்டலான இயக்குநருடன் இணையும் சூரி!

சினிமா

மிரட்டலான இயக்குநருடன் இணையும் சூரி!

வெற்றிமாறனின் விடுதலை திரைப்படத்தின் மூலம், நடிகர் சூரி ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு, கருடன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து, ஹீரோவாக நடிப்பதற்கே அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்நிலையில், மிரட்டலான இயக்குநருடன், நடிகர் சூரி இணைந்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, விலங்கு என்ற வெப் சீரிஸ் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்த பிரசாந்த் பாண்டியராஜ், தற்போது புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.

இந்த படத்தில் தான், சூரி ஹீரோவாக நடிக்க உள்ளாராம். இந்த படமும் வெற்றி அடைந்தால், சூரியின் மார்கெட் உச்சத்துக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More in சினிமா

To Top