வழக்கு எண் 18/9 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸ்ரீ. முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வழங்கிய இவர், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று போன்ற தரமான படங்களில், முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
இருப்பினும், இவரால் திரைத்துறையில் முக்கியமான இடத்தை பிடிக்க முடியவில்லை. இவ்வாறு இருக்க, நடிகர் ஸ்ரீ-யின் தற்போதைய புகைப்படங்கள் சில வெளியாகி, வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.