அரசியல்
பெண் பத்திரிக்கையாளரிடம் அத்துமீறிய நடிகர் சுரேஷ் கோபி
மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் கோபி கடந்த 2016ஆம் ஆண்டு மாநிலங்களவை நியமன எம்.பியாக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு சில மாதங்களில் பாஜகவில் இணைந்தார்.
இந்நிலையில் கோழிக்கோட்டில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பெண் செய்தியாளர் ஒருவர் சுரேஷ் கோபியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு சுரேஷ் கோபி சிரித்தபடியே தோள்கள் மீது கை வைத்து சாவகாசமாக பதிலளித்தார். அதனை அசவுகரியமாக கருதிய பெண் செய்தியாளர் விட்டு விலகி பின்னால் சென்ற பிறகும் கூட தோளில் கை வைத்துதான் பதில் கூறினார்.
இதுதொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையான நிலையில் சுரேஷ் கோபி மன்னிப்பு கேட்க வேண்டும் என கண்டனங்கள் வலுத்தன. இந்நிலையில் தனது செயலுக்கு சுரேஷ் கோபி வருத்தம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விளக்கம் அளித்த அவர், “பெண் பத்திரிகையாளர் நான் செல்லும் வழியை மறித்து நின்றதால் அவரை ஒருபக்கமாக நகர்த்த முயற்சி செய்தேன். நான் ஒரு தந்தை. ஒரு தந்தையாக பெண் பத்திரிகையாளரிடம் நான் மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன்” என்றார்.
என்னுடைய நடத்தையால் அவர் மனம் புண்பட்டிருந்தாலோ அல்லது அசவுகரியமாக உணர்ந்திருந்தாலோ அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்றும் கூறினார்.
