Connect with us

Raj News Tamil

ரோலக்ஸ் படம் கன்ஃபார்ம்? கங்குவா மேடையில் உறுதி அளித்த சூர்யா!

சினிமா

ரோலக்ஸ் படம் கன்ஃபார்ம்? கங்குவா மேடையில் உறுதி அளித்த சூர்யா!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல், விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோர் நடித்திருந்த திரைப்படம் விக்ரம். பெரும் வெற்றி அடைந்த இந்த திரைப்படத்தில், ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில், சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

சில நிமிடங்கள் மட்டுமே திரையில் வந்திருந்தாலும், பெரும் வரவேற்பை பெற்ற இந்த கதாபாத்திரத்தை மையப்படுத்தி, முழு நீள திரைப்படம் எடுக்க இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில், இப்படம் தொடர்பான முக்கிய அறிவிப்பை, நடிகர் சூர்யா அறிவித்துள்ளார். அதாவது, கங்குவா படத்தின் டீசர் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்துக் கொண்ட பாலிவுட் நடிகர் வருண் தவான், நடிகர் சூர்யாவிடம், ரோலக்ஸ் திரைப்படம் குறித்து கேள்வி கேட்டிருந்தார்.

இதற்கு, இப்படத்தின் பின்னணி பணிகள் சென்றுக் கொண்டிருக்கிறது. நிச்சயம் இப்படம் எடுக்கப்படும். அதுதான் என்னுடைய அடுத்த படம் என கூறியிருந்தார். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

More in சினிமா

To Top